Connect with us

Cinemapettai

150 நாட்கள் ஓடிய அஜித் படங்கள்.. வசூல் ராஜாவாக மாற்றிய அஜித் படங்கள்

ajith-150-days-movies-list

Tamil Cinema News | சினிமா செய்திகள்

150 நாட்கள் ஓடிய அஜித் படங்கள்.. வசூல் ராஜாவாக மாற்றிய அஜித் படங்கள்

150 நாட்கள் ஓடிய அஜித் படங்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை ஒரு படம் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடுவது. ஆனால் ஒரு காலத்தில் ஒரு படங்களும் 100 அல்லது 200 நாட்கள் வரை ஓடும். ஏன் இந்த மாற்றம் எல்லாத்துக்கும் தமிழ் ராக்கர்ஸ் தான் காரணம். டெக்னாலஜி வளர வளர படங்களை மொபைலில் பார்த்து விடுகின்றனர். சரி முன்பு வெளிவந்த அஜித்தின் வெற்றிகரமான படங்கள் இதோ.

#ஆசை

ajith aasai

ajith aasai

அஜித் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் ஆசை. இப்படம் அஜித் திரை வாழ்க்கையில் மிகபெரும் வெற்றியை கொடுத்தது. இப்படத்தை இயக்குனர் வசந்த்  இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். இப்படம் அஜித்துக்கு மிக முக்கியமான படம். சுவலட்சுமி  இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்குமாரின் நடிப்பு,பிரகாஷ் ராஜ் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

#காதல் கோட்டை

ajith kathal kottai

ajith kathal kottai

அஜித் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் காதல் கோட்டை. இப்படத்தின் மூலம் அஜித் தேவயாணி காதல் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அகத்தியன் இப்படத்தை இயக்கியுள்ளார். தேவாவின் இசையமைப்பில் இப்படம் வெளியானது. அந்த கால காதல் படங்களில் இது ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது.

#காதல் மன்னன்

ajith kathal mannan

ajith kathal mannan

அஜித்குமார் மற்றும் மனு இருவரும் இணைந்து நடித்த படம் காதல் மன்னன். இப்படம் அஜித்தின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படம். இப்படத்தில் அமைந்த பாடல் அனைத்தும் வெற்றி பெற்றன. இந்த படத்தின் மூலம் அஜித்தின் நடிப்பில் நிறைய பெண் ரசிகர்கள் வந்தனர். விவேக், கரன் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.”Unnai Paartha” எஸ்பிபி-யின் பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு இப்பாடல் மிக முக்கிய காரணம் ஆகும்.

#வாலி

ajith vali

ajith vali

அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. இப்படம் அஜித் இருக்கும் எஸ்.ஜே.சூரியாவிற்கும் இருவருக்கும் தமிழ்சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. எஸ்.ஜே.சூர்யாவிற்கு இதுவே முதல் படம், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். அஜித் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித்தின் நடிப்பில் அனைவருக்கு ஆச்சர்யத்தை வர வைத்தது. இப்படத்திற்கு தேவா இசை அமைத்திருப்பார்.

#அமர்க்களம்

ajith amarkalam

அஜித்குமாருக்கு திரைவாழ்க்கையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கைக்கும் மிக முக்கியமான படம் அமர்க்களம். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். பின்பு இருவரும் நிஜவாழ்க்கையிலும் ஜோடி அடைந்தனர். அமர்க்களம் படத்தில் அஜித்தின நடிப்பும் ஷாலினியின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. ரகுவரன், ராதிகா,நாசர் போன்ற மிகப்பெரிய பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

#தீனா

ajith dhenna

ajith dhenna

அஜித் நடிப்பில் உருவான படம் தீனா இப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இப்படத்தில் லைலா நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் தான் அஜித்திற்கு தல என பெயர் கிடைத்தது. இப்பெயரை வைத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

#வில்லன்

villain

villain

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படம் இதன். இந்த படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித்திற்கு ஜோடியாக மீனா கிரண் நடித்தனர். தொடர்ந்து தோல்வியை கொடுத்து வந்த அஜித் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் கேஎஸ் ரவிக்குமார். வில்லன் படத்தை நல்ல கமர்சியல் படமாக கொடுத்து வெற்றியை கொடுத்தார்.

பில்லா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் பில்லா. இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்திருப்பார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். ரஜினியின் பில்லா படத்தை ரீமேக் செய்து அதில் வெற்றியும் பெற்றனர். பின்பு பில்லா இரண்டாம் பாகம் எடுத்தனர் அந்த படம் முதல் பாகம் அளவுக்கு வெற்றி பெறவில்லை.

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. கூடுதலாக அர்ஜுன் நடித்திருப்பார். இந்த படத்தின் ரீ ரிக்கார்டிங், பாடல்கள், படம் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதன் பின்னர் தமிழ் சினிமாவில் நாட்கள் கணக்கு முடிந்து வசூல் கணக்கு என மாறியது. முப்பது நாள் ஓடினாலே பெரிய விஷயமாக இருந்தது இப்பொழுது பத்துநாள் ஓடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படிதான் அடுத்தடுத்து வந்த அஜித்தின் வேதாளம் வீரம் ஆரம்பம் என அனைத்தும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top