fbpx
Connect with us

Cinemapettai

புதிய கேப்டனை நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ! ஐபில் 2018 !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய கேப்டனை நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ! ஐபில் 2018 !

ஐபில்

இரண்டு மாத கிரிக்கெட் கோடை கொண்டாட்டம் தான் ஐபில். இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன.

இதில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக்க ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.

டீம் ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. ஸ்மித் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். மேலும் ஐசிசி விதிமுறையை மீறி பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் விவாத களமாகிவிட்டது. மேலும், ‘பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்’ என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

Bancroft – Smith

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பொறுப்பேற்று தங்களின் கேப்டன் , துணை கேப்டன் பதவியில் இருந்து விலகினர். இந்நிலையில் ஐசிசி ஸ்மித்துக்கு ஒரு போட்டி தடையும் , பேன்கிராஃப்ட்க்கு 3 டி மெரிட் புள்ளிகள் அளித்தது. மேலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்னும் அவர்கள் தண்டனை என்னவென்றே முடிவை சொல்லவில்லை. இந்த வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட முடியாமல் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகின்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல மிக முக்கியமான வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஆதலால், ஐசிசி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவருக்கு விதிக்கப்படும் தண்டனையைப் பொறுத்தே அணியின் முடிவு மாறுபடும். பொறுத்திருந்து பார்க்கலாம் என்றது அணி நிர்வாகம்.

இந்நிலையில் அணியின் புதிய கேப்டனாக அஜின்க்யா ரஹானேவை அறிவித்த்துள்ளது நிர்வாகம்.

Ajinkya Rahane

மேலும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக ஸ்மித் அவர்கள் தானாகவே முன்வந்து விளக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்மித் வீரராக மட்டும் களம் இறங்குவார் என்று முடிவாகியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top