Sports | விளையாட்டு
வெற்றியை கொண்டாட ஏடா கூடமான கேக் வெட்ட மறுத்த ரஹானே.. வைரலாகுது வீடியோ!
ஒரு நாள் போட்டி, டி 20 போட்டிகளில் வாய்ப்பு இருக்கு இந்திய டீமுக்கு, எனினும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் துளியும் வாய்ப்பே கிடையாது, அதுவும் கோலியும் இன்றி படு தோல்வியை தான் இந்திய டீம் தழுவும். இதுவே பல ஜாம்பவான்களின் கருத்து. அதற்கு ஏற்றார் போல் முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்து போட்டியில் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் நடந்த விஷயங்கள் அனைத்தும் ஆச்சர்யம் தான்.
அஜின்கியா ரஹானே கேப்டானாக பொறுப்பேற்றார். ஐந்து பௌலர்கள் என்ற ஸ்ட்ராட்டஜியுடன் டீம் தேர்வு நடந்தது. தோல்வியை சந்தித்த இந்திய டீம்மை தன்னம்பிக்கையுடன் வழி நடத்தி வெற்றி பெற வைத்தார். இரண்டாவது போட்டியில் அசத்தலாக சதமும் அடித்தார். ரோஹித்தின் வருகை, விஹாரியின் அசத்தல் பேட்டிங், தாகூர் – சுந்தர் பேட்டிங், பண்ட், கில் காமித்த அதிரடி, சிராஜின் சிறப்பான பந்துவீச்சு என பல வீரர்களின் கூட்டு முயற்சியில் இந்தியா பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது.
ரஹானாவின் கேப்டனசி மற்றும் பௌலர்களை மாற்றி ஓவர் வீச வைத்த விதம் என பாராட்டை பெற்றது. வீரர்கள் இந்தியா திரும்பியது பலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் நடராஜன், சிராஜ், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை சொல்லலாம்.
மும்பையில் நல்ல வரவேற்பை கொடுத்தனர் ரஹானேவின் குடியிருப்பில் உள்ள நண்பர்கள் மற்றும் க்ளப் நபர்கள். அனைவரது பாராட்டையும் தன்னகடத்துடன் பெற்றுக்கொண்டார் . மேலும் வெற்றியை கொண்டாடும் விதமாக கேக்கும் ஆர்டர் செய்திருந்தனர். கேக்கில் கங்காரு அமர்ந்து இந்திய கோடியை பிடித்திருப்பது போல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ajinkiya rahane refuses to cut the cake
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு என்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அடையாளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த கேக்கை பார்த்த ரஹானே, அதை வெட்ட மறுத்துவிட்டார்.
பிறர் மனதை புண்படுத்த கூடாது என இவர் எடுத்த முடிவு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இவர் தான் ஒய் கிரிக்கெட்டில் ஒரு ஜென்டில்மேன் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
