Reviews | விமர்சனங்கள்
மராட்டிய வீரனின் சாகசங்கள் – தன்ஹாஜி திரைவிமர்சனம்
ஓம் ராவத் இயக்கத்தில் அஜய் தேவ்கன், கஜோல், சைப் அலி கான் முக்கிய வேடத்தில் நடித்து ஜனவரி 10 ரிலேஷன்னா படமே தன்ஹாஜி. இப்படத்தின் கதைக்களம் 17 ஆம் நூற்றாண்டு. போர்த்தலைவரான தன்ஹாஜி மலூசாரே வாழக்கையை மையப்படுத்தும் கதை. சரித்திர படங்களுக்கு எப்பொழதுமே நம் ஊரில் நல்ல வரவேற்பு இருக்கும், அதிலும் சுதந்தர போராட்டம் சம்மந்தப்பட்ட படம் எனில் டபிள் ஜாக் பாட் தான் ரசிகர்களுக்கு. சினிமாவிற்கான கமெர்ஷியல் அம்சங்களை சேர்த்து, தங்களுக்கு ஏற்றமாதிரி உண்மை சம்பவங்களை மாற்றிக்கொண்டனர் இந்த படக்குழு.
கதை – சிறு குழந்தையாக இருக்கும் பொழுது தன் தந்தையை யுத்தத்தில் இழக்கிறான் தன்ஹாஜி. ஆண்டுகள் உருண்டோட ஊர்தலைவன் ஆகிறான். தன் மகனின் திருமணத்திற்கு மன்னர் சிவாஜியை அழைக்க செல்கிறான். மறுபுறம் முகலாய பேரரசு ஔரங்கசீப் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான உதயபான் சிங் ராத்தோரிடம் கொந்தானா கோட்டையை கொடுக்கிறார். கூடவே பீரங்கி ஒன்றையும் சேர்த்து எடுத்து வருகிறார். தென் இந்தியாவை கைப்படுத்த இந்த கோட்டையை பயன்படுத்துவது முகலாயர்களின் நோக்கம்.
இந்த விஷயத்தை அறிந்த தன்ஹாஜி, தன் மகன் திருமணத்தையும் பொருட்படுத்தாமல் படையுடன் செல்கிறார். பள்ளத்தாக்கு பகுதியில் உதயபான் சிங் சூழ்ச்சியில் ஏமாற, அடுத்து தனி ஆளாக கோட்டைக்கு செல்கிறார். திட்டத்தை வகுக்கிறார். பின் தன் முழு படையுடன் சென்று எவ்வாறு கோட்டையை மீட்டார் என்பதே மீதி கதை.
சினிமாபேட்டை அலசல் – சுதந்திரம் தாக்கம் மற்றும் மோகத்தை 3 D வடிவில் அட்டகாசமாக காமித்துள்ளனர். படத்தின் மேக்கிங், சண்டைக்காட்சிகள், பின்னணி இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. நம்பிக்கைத்துரோகம், சூழ்ச்சி, நாட்டுப்பற்று, நட்பு, அன்பு, பாசம் என அணைத்து எமோஷன்களின் கலவையே இப்படம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – இது போன்ற படத்தை நம் தென்னிந்திய மொழிகளில் டப் செய்துவிட்டுருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். ஏனோ இந்த் டீம் மிஸ் செய்து விட்டனர். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஹாலிவுட் படங்களுக்கு நிகர். 2 மணி நேரம் 15 நிமிடத்தில் அழகாக எடிட் செய்யப்பட்ட ஆக்ஷன் படமே இது.
சினிமாபேட்டை ரேட்டிங் 3/5
