அஜித் தற்பொழுது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இதற்க்கு முன் அஜித்தின் வீரம்,வேதாளம், விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அஜித் தற்பொழுது நடிக்கும் படம் எல்லாம் தனக்கு உரிய கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார், மேலும் அஜித்திற்கு அமிதாப் என்றால் மிகவும் பேவரட், அமிதாப் நடித்த பின் என்ற திரைபடம் பாலிவுட்டில் ஹிட் அடித்தது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் என்னவென்றால் இந்த படத்தை தீரன் அதிகாரம் வினோத் இயக்க அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறுகிறார்கள், அப்படி இந்த படத்தில் அஜித் நடித்தால் இந்த படம் முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அமையும் என தெரிகிறது.