Tamil Cinema News | சினிமா செய்திகள்
இலைமறை காயாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.
ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

aiswarya-rajesh-cinemapettai
சமீபத்தில் சோனி லீவ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திட்டம் 2 படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். மற்றவர்களைப் போல் இல்லாமல் இலைமறை காயாக கிளாமர் காட்டிய அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

aiswarya-rajesh-cinemapettai-01
