குணசேகரனின் அஸ்திவாரத்தை உடைக்கும் சில்வண்டு.. பெண்களின் அடிமைத்தனத்தை தோலுரிக்கும் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமாக பெண்களை மேலோங்கி காட்டி, அடிமைத்தனத்தை தோலுரிக்கும் விதமாக இருக்கிறது. ஆதிரை விஷயத்தில் என்னதான் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் தோற்றுப் போனாலும் அடுத்தடுத்து குணசேகரன் அவரது குடும்பத்தின் முன்னாடி தினமும் கேவலப்பட்டு தான் வருகிறார்.

அந்த வகையில் ரேணுகா மற்றும் ஞானத்தின் மகள் ஐஸ்வர்யா, ரொம்பவே மெச்சூரிட்டியாக பேசுவது பார்க்க நன்றாக இருக்கிறது. அத்துடன் எனக்கு எந்த சடங்கும் தேவையில்லை என்று துணிச்சலாக பேசி என்னுடைய விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என அனைவரது முன்னிலையிலும் வைத்து குணசேகரனை செல்லாக் காசாக ஆக்கிவிட்டார்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் வசமாக மாட்டிக் கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா.. வேலைக்கு ஆப்பு வைத்த மேனேஜர்

அத்துடன் தன் மகளுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் நான் போக ரெடி என்று ரேணுகா அதிரடியாக பேசினது கைத்தட்டி பார்க்கும் படியாக இருந்தது. மேலும் பருவம் அடைந்து விட்டால் கோயிலுக்கு நுழையவோ, பூஜை செய்வதற்கோ எவ்வித தடையும் இல்லை என்பதை உடைக்கும் விதமாக அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் ஐஸ்வர்யாவை கூட்டிட்டு வந்து விளக்கு ஏற்ற சொல்கிறார்கள்.

இன்னமும் பல இடங்களில் இதை தீட்டு என்று அவர்களை தனிமைப்படுத்தி, மனதளவில் நொந்து போகும் அளவிற்கு சில விஷயங்கள் செய்வதை தடுக்கும் விதமாக இந்த கதையை கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே இந்த மாதிரி கதையை அங்காடித் தெரு மற்றும் அயலி படங்களில் நாம் பார்த்திருப்போம்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

ஆனால் சீரியலில் இதை கொண்டு வந்தால் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து அவர்களுடைய மனதை மாற்றும் விதமாக இருக்கும் என்று இவர்கள் கொண்டு வருவது பாராட்டக்கூடியதாக இருக்கிறது. அடுத்ததாக ஐஸ்வர்யா நான் இனி கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போய் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு என்ன காரணம் என்றால் நான் படிப்பதற்கு என்னுடைய அப்பா பணம் கட்டினால் எனக்கு ஓகே. அதை விட்டுட்டு பெரியப்பா தயவால் நான் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அதை 100 தடவைக்கு ஒரு முறை சொல்லி சொல்லி காட்டுவார். எனக்கு அது அவமானமாக தெரிகிறது. மேலும் எனக்குத் தமிழ், தாய் மொழி தானே நான் கவர்மெண்ட் ஸ்கூலிலே போய் படிக்கிறேன் என்று சிந்தித்து சிகரத்தை தொட ஆரம்பித்து விட்டார்.

Also read: படப்பிடிப்பு தளத்தில் நடிகருடன் குணசேகரனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம்.. திடீரென விலகிய மாரிமுத்து

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்