கேன்ஸ் திரைப்பட விழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது.

இதில் தமிழ் சினிமாவிலிருந்து கமல் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்படவிழாவில் அனைவருக்கும் சிறப்பு வரவேற்ப்பு அளிக்கப்படும்.

அதன் தனி சிறப்பு தான் சிகப்பு கம்பள வரவேற்ப்பு, இந்த  வரவேற்ப்பு சிறப்பு விருந்தினருக்கு மட்டுமே.

விழா துவக்கத்தின் போது சிகப்பு கம்பளத்தின் மேல் ஒய்யாரமாக நடந்து வருவது தான் அதன் சிறப்பு.

விமான தாமதம் காரணமாக ஐஸ்வர்யா ராய் அந்த சிகப்பு கம்பள வரவேற்ப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது, எனவே ஐஸ்வர்யா ராய்க்காக மீண்டும் அந்த வரவேற்ப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக ஐ லைன் செய்து கொண்டு அவர் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தது அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பரவசப்படுத்தியது.

வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் ஐஸ்வர்யா ராய் ஒய்யார நடையை தங்கள் கேமிராவுக்குள் படம் எடுத்துக்கொண்டனர். மே 21ம் தேதி இன்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார்.