மீனாவை மிஞ்சிய ஐஸ்வர்யா.. பற்றி எரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது எந்த ஒரு எதிர்மறை கருத்துக்களும் இல்லாத சீரியல் என்பதால் சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலாக மாறி உள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அவ்வபோது வில்லியாக காண்பிக்கப்படும் மீனா அடுத்த எபிசோடில் டம்மியாக மாறிவிடுவார்.

ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் நுழைந்துள்ள மூன்றாவது மருமகள் ஐஸ்வர்யா, மீனாவை மிஞ்சும் அளவுக்கு சீரியலில் வில்லத்தனத்தை மெல்ல மெல்ல காட்டத் துவங்கியுள்ளார். ஏனென்றால் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டில் நுழையக்கூடாது என்று மூர்த்தி, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் தற்போது வீட்டிற்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே வீட்டிற்குள் நுழைந்த நாளிலிருந்தே ஐஸ்வர்யா ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். அதற்கு மீனாவையும் கூட்டு சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார். அந்த வகையில் தற்போது குழந்தையில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக யாருக்கும் தெரியாமல் செல்லும் கதிர்-முல்லை இருவரையும் வைத்து ஐஸ்வர்யா புது பிரச்சினையை கிளப்பி உள்ளார்.

தனம் இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு செல்வதை யாருக்கும் சொல்லாமல் மறைமுகமாக வைத்திருக்கும்போது, ஐஸ்வர்யா அதை மீனாவிடம் அப்பட்டமாக சொல்லி, தனத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். அத்துடன் மீனாவிடம் இதை ஏன் மறைக்கிறீர்கள் என்றும் தனத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டதுடன், மீனாவையும் குத்தி விடுகிறார்.

மீனாவிற்கு தெரியக்கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று மீனாவை தூண்டிவிட்டு தனத்திடம் பேசவைக்க ஐஸ்வர்யா முயற்சிக்கிறார். இருப்பினும் மீனா, ‘தனம் அக்கா எனக்கு தெரியக்கூடாது என்று சொல்லாமல் மறைக்கவில்லை. ஒருவேளை முல்லைக்கு இதனால் மனக்கஷ்டம் ஏற்படக்கூடாது என்றும் மறைத்திருக்கலாம்’ என்று கூறி  ஐஸ்வர்யாவின் மூக்கை உடைத்து விடுகிறார்.

இவ்வாறு ‘சனியன தூக்கி பனியன்ல போட்டுக்கிட்ட மாதிரி’ பாவம் படிக்கும்போது கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுறாங்க என்று மூர்த்தி-தனம் இருவரும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை வீட்டிற்குள் சேர்த்து கிட்ட பாவத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யா புது புது பிரச்சினையை கிளப்பி பற்றி ஏறிய வைக்கிறார். இதையெல்லாம் தனம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்