Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அபார்ட்மென்ட்ஸ், பண்ணை வீடு.. வாய் பிளக்க வைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு!

Aishwarya-Rajinikanth

18 வருடங்களாக நண்பர்களாகவும் தம்பதியர்களாகவும் பெற்றோர்களாகவும் இருந்த நட்சத்திர ஜோடி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். இதன்பிறகு இவர்கள் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அது செல்லுபடியாகவில்லை.

இதையடுத்து தனுஷ், ஹாலிவுட் பாலிவுட் என சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் நிலையில், ஐஸ்வர்யாவும் படங்களை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இவர் ஏற்கனவே பயணி என்ற மியூசிக் வீடியோவை இயக்கியிருக்கும் நிலையில், தற்போது ஹிந்தியில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தையும் ஐஸ்வர்யா இயக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா, யோகா உடற்பயிற்சி என தன்னுடைய உடலை ஆரோக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இன்னிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொத்து மதிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுகிறது. ஐஸ்வர்யாவிற்கு சில அப்பார்ட்மெண்ட், பண்ணை வீடுகள் சொந்தமாக இருக்கிறது. அத்துடன் சில நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.

இவ்வாறு ஐஸ்வர்யாவிற்கு மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு சொத்து சுகத்தை வைத்திருக்கும் ஐஸ்வர்யா, தனுஷ் தன்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு தான் சுதந்திரமாக வாழ்வதாக தெரிகிறது.

இவர் தன்னுடைய இரண்டு மகன்களுடன் அதிக நேரம் செலவிடும் புகைப்படம் மற்றும் உடற்பயிற்சி வீடியோவை பதிவிடுவது என கடந்த சில நாட்களாகவே வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோன்று தனுஷூம் தன்னுடைய மகன்களுடன் சமீபத்தில் இளையராஜா கச்சேரியில் கலந்து கொண்டார்.

Continue Reading
To Top