Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு.. லிங்கா, யாத்திராவுடன் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பின்பு 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு இருவரும் அறிவித்தனர்.

இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடன் இருவருமே அதிக நேரம் செலவிடுவார்கள். சமயத்தில் வாத்தி படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு கூட தனுஷ் தனது இரண்டு வாரிசுகளையும் அழைத்து வந்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு மகன்களும் படிக்கும் பள்ளிக்கு சென்று ஸ்போர்ட்ஸ் டேவில் கலந்து கொண்டு அவர்களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மகன்களுடன் புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

aishwarya-rajinikanth 1-cinemapettai

aishwarya-rajinikanth 1-cinemapettai

Also Read: ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்

அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு என ஐஸ்வர்யா நினைக்கும் அளவுக்கு தனுஷின் இரண்டு மகன்களும் வெயிலில் ஸ்போர்ட்ஸ் டே அன்று ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெயிலுக்கு பயந்து லிங்காவின் நிழலில் ஒளிந்து கொள்வது போல் செம க்யூட்டான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் பள்ளியில் மகன்கள் விளையாட்டில் பதக்கம் வென்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ‘வெயில் வாட்டி வதைத்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடும் பிள்ளைகளின் ஆர்வத்தை நிறுத்த முடியாது. லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் வெயிலில் குளிப்பதையும் ஒளிர்வதையும் பார்க்க முடிந்தது’ என்று புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார்.

கையில் கோப்பையுடன் கெத்து காட்டிய தனுஷின் மகன்கள்

dhanush-sons-cinemapettai

dhanush-sons-cinemapettai

மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர்.

Also Read: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!

அதே சமயம் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் லிங்கா மற்றும் யாத்ரா இருவரை பற்றிய தகவலும் சமீப காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இவர்களும் விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Continue Reading
To Top