ஹார்டு டிஸ்கை கண்டுபிடித்த ஐஸ்வர்யா.. ஓடிடிக்கு வரும் லால் சலாம், அங்க தான் ஒரு ட்விஸ்ட்

Lal Salam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் இந்த வருட தொடக்கத்தில் வெளிவந்தது. லைக்கா தயாரித்திருந்த இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

ரிலீசுக்கு முன்பு ஏகப்பட்ட ப்ரமோஷன் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை தயாரிப்பு தரப்பு அதிகப்படுத்தி இருந்தது. ஆனால் அது அத்தனையும் வேண்டாத வேலை என நிரூபிக்கும் பொருட்டு இருந்தது வெளிவந்த விமர்சனங்கள் அனைத்தும்.

அது மட்டும் இன்றி 90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் வெறும் 17 கோடிகளை மட்டுமே வசூலித்திருந்தது. இதனால் லைக்கா தரப்பினர் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா தான் என வெளிப்படையான கருத்துக்களும் கிளம்பியது.

அதிலும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என ரஜினி ரசிகர்கள் கூறி வந்தனர். இப்படி படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களை ஒரு இயக்குனராக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஹார்டு டிஸ்கை கண்டுபிடித்த ஐஸ்வர்யா

அதற்கு பதிலாக முக்கியமான காட்சி சேமித்து வைக்கப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க் காணாமல் போய்விட்டது. திரும்பவும் அந்த காட்சியை படம் பிடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி எஸ்கேப்பாக பார்த்தார். ஆனால் அதை யாரும் நம்பவில்லை.

அதையே ட்ரோல் செய்து தெறிக்கவிட்டனர் இணையதள வாசிகள். இப்படி மீம்ஸ் மெட்டீரியல் ஆக மாறி இருந்த லால் சலாம் ஓடிடிக்கு இதுவரை வரவில்லை. அதைக் கூட நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினார்கள்.

ஆனால் தற்போது படம் டிஜிட்டலுக்கு வர தயாராகிவிட்டது. அதன்படி நெட்பிளிக்ஸ் தளத்தில் தான் லால் சலாம் வெளியாக இருக்கிறது. அதன் தேதியை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மேலும் ஒரு கூடுதல் ட்விஸ்ட் இருக்கிறது.

அதாவது தியேட்டர் போல் இல்லாமல் ஓடிடியில் சில மாறுதல்கள் இருக்குமாம். என்னவென்றால் காணாமல் போன சில புட்டேஜ் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாம். அதனால் நிச்சயம் லால் சலாம் டிஜிட்டலில் ரசிகர்களின் கவனத்தை பெறும் என தெரிகிறது.

ஒரு வழியாக டிஜிட்டலுக்கு வரும் லால் சலாம்

- Advertisement -spot_img

Trending News