fbpx
Connect with us

‘துருவ நட்சத்திரம்’ அப்டேட்: மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்

Vikram-AishwaryaRajesh-DhruvaNatchathiram

News / செய்திகள்

‘துருவ நட்சத்திரம்’ அப்டேட்: மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்

விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் விக்ரமை மட்டும் வைத்து சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் கால்ஷீட் தேதிகள் பிரச்சினை காரணமாக விலக, ‘பெல்லி சூப்புலு’ பட நாயகியான ரீது வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தை கவுதம் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ஜோமன் மாற்றப்பட்டு சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மகன் ஆவார்.

இந்நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரமும் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாகவும், ரீது வர்மா மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் படக்குழு சார்பில் கூறப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top