சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தாலும் மணிகண்டனின் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் தன் அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறிப்போனவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.aishwariya_cinemapettai

இவர் தற்போது டாடி என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக நடிகைகள் பலரும் தாங்கள் தங்கள் திரைப்பயணத்தில் சந்திக்கும் ஒரு சில பாலியல் தொல்லைகள் குறித்தும், இன்னல்களை குறித்து வெளிப்படையாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்.

aishwarya_cinemapettaiஅந்த வகையில் சமீபத்தில் வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சில உப்புமா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள் எனவும், அதனை அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள் எனவும், நடிகையாக ஜெயிக்க வைப்பதற்காக இப்படி பெண்களை வற்புறுத்துவது மிக கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.