Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அடுக்கடுக்கா குவியும் பட வாய்ப்புகள்.. அம்மணியின் மாஸ்டர் திட்டத்தால் மற்ற நடிகைகள் கதறல்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிற்கு ஏராளமான பாராட்டுக்கள் கிடைத்தன, இதையடுத்து அவர் நடித்த பூமிகா என்ற படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
தமிழில் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா, தெலுங்கில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக அசத்தியுள்ளார். அதற்கு முன், மிஸ் மேட்ச் உள்பட சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். பொலிடிகல் மற்றும் த்ரில்லர் கலந்த இந்த படத்தை தேவா கட்டா இயக்குகிறார்.
இந்த படத்தில் முதலில் நிவேதா பெத்துராஜ் தேர்வு செய்யப்பட்டார், பின் அவரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
முதலில் கேட்கும்போது ஐஸ்வர்யா ராஜேஷின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றும் பிறகு கிடைத்ததால், நிவேதா மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

aishwarya rajesh
