Connect with us

Cinemapettai

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பார்த்து ரசித்து பாராட்டிய படம் எது தெரியுமா ?

Cinema News | சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பார்த்து ரசித்து பாராட்டிய படம் எது தெரியுமா ?

ஐஸ்வர்யா ராஜேஷ் கண்ணே கலைமானே படத்தை பற்றி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

நம்ப சென்னை பொண்ணு. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர். கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் ஒரு நடிகை.

kanaa

சமீபத்தில் விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி, கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் கனா என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது.

கண்ணே கலைமானே

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமன்னா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Kanne Kalimane

யதார்த்த சினிமா ஜானரில் இப்படம் பலரின் பாராட்டை பெற்று வருகின்றது . சீனு ராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ், கண்ணே கலைமானே பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்

“கண்ணே கலைமானே சீனு ராமசாமி சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு எமோஷனல் படம். தமன்னா மற்றும் உத்தியின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.” என்பதே அந்த ஸ்டேட்டஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top