Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹாரர் திரில்லர் பூமிகா- வைரலாகுது காட்டு ராணி போன்ற பர்ஸ்ட் லுக்
By
ஐஸ்வர்யா ராஜேஷ் நம்ப சென்னை வாசி. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரை டு வெள்ளித்திரை சென்றவர். கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் ஒரு நடிகை.
மணிகண்டனின் காக்கா முட்டை, மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் கனா, விருமாண்டியின் க பெ ரணசிங்கம் என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது.இவர் நடிப்பில் வெளியாகும் 25 வது படம் பூமிகா.

aishwarya rajesh in boomika
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம். இப்படத்தை ரதிந்திரன் இயக்குகிறார். ஒளிப்பதிவு – ராபர்ட், இசை – ப்ரித்வி சந்திரசேகர். பூமிகா படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவியும் தமன்னாவும் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.இப்படமும் OTT ரிலீஸ் சென்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.
