fbpx
Connect with us

Cinemapettai

இதெல்லாம் என்ன வேலை.. எக்கு தப்பா மாட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதெல்லாம் என்ன வேலை.. எக்கு தப்பா மாட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஆள் ஆகி விட்டாலே நாம் எது செய்தாலும் சரி என்ற நினைப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்துவிட்டது போல. தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்கை உடைத்துக் கொள்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார். அந்த மாதிரி ஒரு விஷயத்தைத் தான் தற்போது செய்து மாட்டிக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தி தெரியாது போடா என்ற பதிவு பிரபலமானது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். பல நடிகர் நடிகைகள் ஹிந்தி தெரியாது போடா என்ற பதிவிட்ட டி-ஷர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டனர்.

அதில் ஐஸ்வர்யாவும் ஒருவர். தனது சகோதரருடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த வட இந்திய ரசிகர்கள் டென்ஷனாகி ஐஸ்வர்யா ராஜேஷ் வட இந்திய தொலைக்காட்சியில் செய்த ஒரு விஷயத்தை வைத்து அவரை கேவலப்படுத்தி வருகின்றனர்.

வட இந்திய சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு ஹிந்தி நன்றாகவே தெரியும் என அந்த சோ முழுக்க இந்தியில்தான் பேசினாராம்.

அதில் குற்றமில்லை. ஆனால் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகத்தைக் கூற தகுதி இல்லை எனவும், பச்சோந்தி மாறி மாறி மாறி பேசக்கூடாது எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளங்களில் சரமாரியாக தாக்கப்பட்டு வருகிறார்.

உடனடியாக இந்த புகைப்படத்தை டெலிட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top