ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கும் மனசு கூட நயன்தாராவுக்கு இல்லையா? இணையத்தில் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

nayanthara aishwarya rajesh
nayanthara aishwarya rajesh

தமிழ் சினிமா திரை பிரபலங்கள் பலரும் கொரோனா நிதியாக தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

முதல் தொற்று விட இரண்டாவது கொரோனா தொற்று படு தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்திற்கும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வீடியோ வாயிலாக கொரோனா நிதியாக தங்களால் முடிந்த அளவிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் பிரபலங்கள் பலரும் முன்வந்து கொரோனா நிதி கொடுத்துள்ளனர்.

aishwarya rajesh
aishwarya rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயும், பெப்ஸி அமைப்பினருக்கு ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். தற்போது இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களே ஒரு லட்சம் ரூபாய் தரும் பொழுது நயன்தாரா மட்டும் ஏன் எந்த ஒரு நிதியும் கொடுக்காமல் உள்ளார் என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் தற்போதுதான் நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அதனால் ஓரிரு நாட்களுக்கு பிறகு நயன்தாரா நிதி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner