Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் பூமிகா ட்ரெய்லர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில நடிகைகள் மட்டுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிப்பார்கள். அப்படி ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, கனா ஆகிய படங்களை கூறலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் ஒரு இயற்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இயற்கையை அழிக்கும் மனிதர்கள் இறுதியில் இயற்கை மனிதர்களை அளிக்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். மேலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது தற்போது பூமிகா படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளனர். தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீப காலமாக அனைத்து படங்களுமே OTT தளத்தில்தான் வெளியிடப்படுகிறது. தற்போது இந்த வரிசையில் பூமிகா திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. மேலும் இப்படத்தில் இயற்கையை எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் தற்போது ரசிகர்கள் ஆர்வமாக படத்தை பார்ப்பதற்கு உள்ளனர்.

Continue Reading
To Top