Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் உண்மையிலேயே ரொம்பவே கிரேட்.. பாராட்டும் பிரபலங்கள்.. காரணம் இதுதான்
நேற்று தனது 29 வயதை கடந்த காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடிய விதம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.
சினிமா உலகில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் நம்ம ஊரு பொண்ணுங்க. ஆமாங்க அவர் தமிழ் பொண்ணு, பெரிய பெரிய டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு முதலில் கிடைக்கவில்லை.
ஆனால் அதேநேரம் நடிப்பதற்கு அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. கிடைத்ததை சரியாக பயன்படுத்தி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திறமையால் அடுத்தடுத்த படங்களில் சாதனை படைத்தார். காக்கா முட்டையில் தொடங்கி தர்மதுரையில் வளர்ந்து, கனா படத்தில் கதை நாயகியாக உயர்ந்தார்.
கடைசியாக சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று தனது 29 ஆவது பிறந்தநாளை, ஹோப் என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார்.
இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Actress #AishwaryaRajesh celebrates her birthday with children at the Hope Public Charitable Trust. @aishu_dil #HBDAishwaryaRajesh pic.twitter.com/5FmGiq1pGR
— Diamond Babu (@idiamondbabu) January 10, 2020
