Aishwarya Rajesh
Aishwarya Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ்

நம்ப சென்னை பொண்ணு. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர். கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் ஒரு நடிகை.

aishwarya rajesh

தற்பொழுது பயங்கர பிஸி. விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி, கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ்

Sivakarthikeyan Productions

நடிகர் சிவாவின் தயாரிப்பு நிறுவனம். நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தன் நண்பன் அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிகம் படித்தவை:  இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் தேவி!
Sivakarthikeyan Productions

இப்படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கும் படமாம். பெண் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். அவரின் அப்பா வேடத்தில் சத்யராஜ். தன் மக்களின் கனவை நிறைவேற்ற மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கும் போராட்டம், எவ்வாறு பல இன்னல்களை கடந்து தன் இலக்கை நோக்கி ஹீரோயின் பயணிக்கிறார் போன்ற விஷயங்களை வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அதிகம் படித்தவை:  தல- தளபதி பற்றி, டைரக்டர் கார்த்தி, மெட்ராஸ் பார்ட் 2, பிடித்த படம்- தீரன் கார்த்தி சொன்ன பதில் இது தான்!
Aishwarya-Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி எடுக்க ஆரம்பித்து விட்டாராம். மேலும் மகளிர் கிரிக்கெட் பார்த்து உடல் அசைவுகள் பற்றியும் தெரிந்துக்கொள்கிறாராம்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

siva arun raja

படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் சிவா இருவரும் கல்லூரியில் ஒரே கிளாஸ். மேலும் படத்தின் இசையைமைப்பாளர் ‘திபு நின்னான் தாமஸ்’ அவர்களும் இவர்களின் காலேஜ் நண்பர் தானாம்.