‘வடசென்னை’ படத்தில் கிடைத்த வாய்ப்பு ‘காக்கா முட்டை’ படம் கொடுத்த பரிசு என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

தனுஷ் -வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய படம் ‘காக்கா முட்டை’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா பேசப்படும் நடிகை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும், காக்கா முட்டை படத்தை தயாரித்த தனுசுடன் ஜோடி சேரவேண்டும் என்கிற ஆசையும் தனக்கு இருப்பதாக கூறிவந்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இப்போது வடசென்னை படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது.

அதிகம் படித்தவை:  கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் – ஷியாம் நடிப்பில் காவியன் டீஸர் !

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக முதலில் சமந்தா பேசப்பட்டார். பின்னர் அமலாபால் ஒப்பந்தமானார். ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனுசுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், ‘வடசென்னை’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் அமலாபால் நடிக்கவில்லை என்றதும், என்னை அழைத்தனர். அதற்கு காரணம் ‘காக்கா முட்டை’ படம் தான். அந்த படத்தைபோன்று குப்பத்து பெண் வேடம் என்பதால், தயங்காமல் என்னை அழைத்து விட்டனர். ஆக, ‘காக்கா முட்டை’ மூலம் நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற நான், இப்போது தனுஷ் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடி சேரும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறேன் என்கிறார்’’ ஐஸ்வர்யா ராஜேஷ்.