அச்சு அசல் ஐஸ்வர்யா ராயைப் போலவே இருக்கும் பெண்.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா ராய். இதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் தலைகாட்டிய பின்னர், அவர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். உலக அழகி என்றால் சும்மாவா.. அவருக்கு ஏராளமான படங்கள் வந்து குவிந்தன. இதையடுத்து மும்பையிலே செட்டிலாகிவிட்டார் அம்மணி.

சிறிது இடைவேளைக்குப்பின் தமிழில் ஷங்கரின் ஜீன்ஸ், அஜித், மம்மூட்டியுடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

அதன்பின் மீண்டும் ஹிந்தியில் கவனம் செலுத்திய ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்க வந்த அவர் ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்தார்.

aishwarya rai
aishwarya rai

தற்போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஷ்யர்யா.

இந்நிலையில், பார்ப்பதற்கு அச்சு அசலாக நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இளம் நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவருக்கும் அப்படியொரு உருவ ஒற்றுமை. ஆனால், இந்தப்பெண் யார் என்பது தெரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்