சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முடி கொட்டுவது நிற்க வேண்டுமா.. இதமட்டும் பண்ணுங்க.. ஐஸ்வர்யா ராய் சொன்ன secret

முடி கொட்டுவது, இன்றைய தேதியில் ஒரு யூனிவேர்சல் பிரச்சனையாகவே உள்ளது. முடி கொட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். பதின் பருவம் வந்தாலே, முடி கொட்டும் பிரச்சனையை ஆரம்பமாகி விடுகிறது. மஞ்சள் நீராட்டு விழாவில் துவங்கிய இந்த பிரச்சனை சாகும் வரை பின்தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இயற்கை மருந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மருந்து என பலரும் முடி உதிர்வை தவிர்க்க முயல்கின்றனர். ஒரு சிலருக்கு தீர்வு கிடைக்கிறது, பலருக்கு கிட்டுவதில்லை என்றே சொல்லலாம்.

தினமும் 50-80 முடிகள் உதிர்ந்தால், அது இயல்பே. அதுகூட விழக்கூடாது என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. காரணம், அது முடி வளர்ந்து விழுவதின் சுழற்சி. ஆனால் 100 முடிக்கு மேல் விழுவது, முடி ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்றே கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் சொன்ன Secret

இந்த நிலையில் பெண்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருந்தாலும், எல்லாருக்கும் எல்லாம் செட் ஆவதில்லை. ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய், சொன்ன டிப்ஸ், எல்லோருக்கும் பொருந்தும், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும், எத்தனை பேக் போட்டாலும், ஷாம்புக்கள் பலவற்றை பயன்படுத்தினாலும், பேசிக் உணவு தான். உச்சந்தலையில் மசாஜ் செய்வதை தினசரி வழக்கமாக ஐஸ்வர்யா ராய் பின்பற்றுகிறார். அச்செயல் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. அவுகோடா மாஸ்க் ஐஸ்வர்யா ராய் அதிகம் பயன்படுத்துகிறார்.

என்னதான் இவை அனைத்தையும் செய்தாலும், தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை ஐஸ்வர்யா ராய் வழக்கமாக வைத்துள்ளார், இச்செயல் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கூந்தர் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது. மேலும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்கிறார். அதுவும் அவர் முடியை ஆரோகியமான முறையில் இருக்க உதவுகிறதாம்

- Advertisement -

Trending News