தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டை கலக்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.முன்னாள் உலக அழகியான இவர் ஒவ்வொரு வருடமும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஆஜராகி விடுவார்.

அந்த வகையில் இந்த வருடம் சென்ற இவரின் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். காரணம் என்னவென்றால் இவர் வழக்கத்திற்கு மாறாக Purple நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் கிளப்பி வந்தனர். இவர் பிரபல காஸ்மெட்டிக் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் லிப்ஸ்டிக்கை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் இந்த கலரில் லிப்ஸ்டிக் போட்டுள்ளார்.