ரஜினி-பா.ரஞ்சித் இணைய உள்ள இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரஜினி, தனது அடுத்த படத்தை இயக்கவும் ரஞ்சித்திற்கு வாய்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த படத்திற்கான கதையை தயார் செய்யும் வேலைகளில் ரஞ்சித் இறங்கினார்.

அதிகம் படித்தவை:  இணையத்தில் வைரலாகுது சாயீஷாவின் பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோஸ் - என்ன டிரஸ் பாப்பா இது ???

தற்போது தனது படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை ரஞ்சித் மேற்கொள்ள துவங்கியுள்ளார். ரஜினி தவிர்த்து படத்தில் நடிக்க உள்ள மற்ற கலைஞர்கள் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் என்பது தெரியவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  வெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

இந்த தகவலை சந்தோஷ் நாராயணனின் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும், பிண்ணனி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.