சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாண்டியன் ஸ்டோர் ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? விலகியதற்கு முக்கிய காரணம் இது தானாம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன்-தம்பி பாசத்தையும் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் காலத்தில் தனிக் குடும்பமாக வாழ்வோரின் மத்தியில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் கண்டு பூரிப்படைகின்றனர்.

இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூன்றாவது தம்பியாக நடித்து கொண்டிருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவை திடீரென்று காதல் திருமணம் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். எனவே கடந்த சில நாட்களாகவே கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நகர்ந்துகொண்டிருக்கிறது.

தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த விஜே தீபிகா என்பவர் சீரியலில் இருந்து விலகிய பின், அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடித்துக்கொண்டிருக்கிறார். தப்போது பேட்டி ஒன்றின் மூலம் ஐஸ்வர்யாவாக நடித்த தீபிகா எதற்காக பாண்டியன் சீரியலில் இருந்து விலகினேன் என்பதை உடைத்துப் பேசியுள்ளார்.

தீபிகாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கத் துவங்கும் பொழுதே ஆக்னி எனப்படும் முகப்பரு பிரச்சனை இருந்துள்ளது. கூடுதலாக நடிப்பதற்கு போடப்படும் மேக்கப்பால் முகப்பரு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே சென்றதால், சிகிச்சை எடுத்தும் சரி செய்ய முடியவில்லை.

ps-serial
pandian-storess-serial

பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி ஐஸ்வர்யா அடிக்கடி காண்பிக்கப்படுவதால் இவ்வாறு இருக்கும் முகத்துடன் தொடர்ந்து நடித்தார் எடிட்டிங் வேலை அதிகமாக செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்பதால் பாண்டியன் ஸ்டோர் சீரியலிருந்து விலகி உள்ளதாக தீபிகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக தீபிகாவிற்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்தனராம் .இருப்பினும் அவரால் சரி செய்ய முடியாததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் முகத்தில் இருக்கும் பிரச்சினையை சரி செய்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்குவேன் என்று தீபிகா குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Trending News