Videos | வீடியோக்கள்
ஐஸ்வர்யா இயக்கிய பயணி பாடல்.. வெளியிட்ட ரஜினிகாந்த்
தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. இப்படம் காதல் மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடித்துள்ளார். இப்பாடலுக்கு பயணி எனும் பெயர் வைத்துள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து பெறுவது அறிவித்தனர். அதனால் இவர்கள் இருவரும் தங்களை பாதித்து விடக்கூடாது என்பதற்காக தனுஷ் படங்களில் நடிப்பதிலும் ஐஸ்வர்யா படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தனர்.
ஐஸ்வர்யா இப்பாடலைக் இயக்கியுள்ளதால் ரஜினிகாந்த் இப்பாடலை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பாடலில் நடுத்தர மக்களின் காதலை மையமாகக் கொண்டுஉருவாகியுள்ளது. தற்போதைய இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
