fbpx
Connect with us

ரஜினி வாய்ஸ், ஏ.ஆர்.ரகுமான் இசை – ஐஸ்வர்யாதனுஷின் அடுத்த படம்

News | செய்திகள்

ரஜினி வாய்ஸ், ஏ.ஆர்.ரகுமான் இசை – ஐஸ்வர்யாதனுஷின் அடுத்த படம்

rajinikanth-cinema-veeranவிசாரணை படத்தைத் தொடர்ந்து, தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அம்மாகணக்கு என்கிற படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கடுத்து வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.

இதற்கிடையே ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தைத் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படத்துக்கு ‘சினிமா வீரன்’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

இப்படம் திரைத்துறையைச் சேர்ந்த சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் மற்றும் சண்டைப்பயிற்சி நடிகர்களை பற்றிய ஆவணப்படமாம். நிஜ ஹீரோக்களான சண்டைக் கலைஞர்களின் உழைப்பு பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக இப்படம் அமையும் என்று சொல்கிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவினரின் பங்களிப்பும் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். படத்துக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப்படத்தை முழுமையாக எடுத்து முதலில் திரைப்பட விழாக்களில் திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top