Videos | வீடியோக்கள்
சொல்லிவிடவா ரசிகர்களின் விமர்சனம்.!

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சொல்லிவிடவா’ வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் சந்தன் குமார் ஹீரோவாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.
அர்ஜுனின் சொந்த நிறுவனம் ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார் அர்ஜுன்.இந்த படத்தில் காதல், கலர்ஃபுல் காமெடி, அனல்பறக்கும் ஆக்ஷ்ன்… இப்படி ரசிகர்களையும் கவரக்கூடக் கலைவையாக “சொல்லிவிடவா” தயாராகி இருக்கிறது.
இந்த படத்திற்கு இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், “மொட்டை” ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். H.C.வேணு கோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களுக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்கிறார். கேகே படத்தொகுப்பு, ஆர்ட் டைரக்ஷனை சீனு கவனிக்க, கிக் ஆஸ் காளி ஆக்ஷ்ன் பகுதிகளைக் கவனிக்கிறார்.
‘ஆக்ஷ்ன் கிங்’ அர்ஜுன் என்றாலே தேசியப்பற்று அதிகம் உடையவர். இவர் தயாரிப்பில் உருவான இந்த படம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கதையை காமெடி,லவ்,ஆக்ஷ்ன் மற்றும் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.
