Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாமியாருடன் மல்லுகட்டும் ஐஸ்வர்யா ராய்! குழப்பத்தில் அபிஷேக் பச்சன்!

2007ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் இவர்களின் திருமணம் ஏப்ரல் 20-ஆம் தேதி ‘பன்ட்’ குடும்ப முறைப்படி நடைபெற்றது.
அதன் பிறகு ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை தற்பொழுது இருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் இருந்து மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். அமிதாபின் பங்களாவில் தான் அவர்கள் வசித்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் கொஞ்சம் காலமாக ஆகவே ஆகாது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் நாத்தனார் ஸ்வேதாவுக்கும் பிரச்சனை என்ற பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சேர்ந்து மும்பையில் ரூ. 21 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளனர்.இந்த வீட்டில் ஐஸ்வர்யா தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் தனிக்குடித்தனம் போகப் போவதாக செய்திகள் வெளியாகின.
இருந்த போதிலும் அபிஷேக் பச்சனுக்கு தனது பெற்றோர் என்றால் உயிர். பெற்றோர்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போக மாட்டார். என்னவென்றால் இதற்க்கு முன்னதாக அபிஷேக் பச்சனுக்கும், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Aishwariya family photo
ஆனால் கரிஷ்மா திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போக விரும்பியதால் அபிஷேக் அவரை பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
