Tamil Cinema News | சினிமா செய்திகள்
வீரம் மனதை பொறுத்தது – ஐஸ்வர்யா ராஜேஷ் ! ரத்தக்கறை மனதை உறுத்தும்- டேனியல் பாலாஜி ! இருவரின் ரோல், கெட் – அப் : வட சென்னை !
வட சென்னை
ரசிகர்களிடம் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங். கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தனுஷ் அன்பு என்ற ரோலில் நடித்துள்ளார். அவ்வகையில் ஆண்ட்ரியா சந்திரா என்றும் , சமுத்திரக்கனி குணாவாக, கிஷோர் செந்தில் எனும் ரோலில் நடிப்பதாக தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டார்.
#vadachennai … Daniel balaji as #thambi .. the blood in hand will eat the soul. pic.twitter.com/3utfqUmgDF
— Dhanush (@dhanushkraja) August 19, 2018

Vada Chennai
இந்நிலையில் ஐஸ்வரியா ராஜேஷ் பத்மா என்ற கதாபாத்திரத்திலும், டேனியல் பாலாஜி தம்பி என்ற ரோலில் நடிப்பதாக தனுஷ் போஸ்டர்கள் வெளியிட்டுளார்கள்.
#vadachennai … @aishu_dil as #padma .. Valour is of the mind and not of gender. pic.twitter.com/kt1Y5BwLyO
— Dhanush (@dhanushkraja) August 20, 2018

Vada Chennai
