சூரியன் தமிழ் சினிமாவில் யாரும் எளிதில் மறக்கமுடியாத படம். அதிலும் கவுண்டரின் பஞ்ச் வசனங்கள் இன்றளவும் சூப்பர் ஹிட் தான். மேமே போடுபவர்களின் பாவொரிட் டெம்ப்லேட் பல இப்படத்தில் உள்ளது. அத்தகைய ஒரு வசனமே பட தலைப்பாக மாறியுள்ளது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

AIS

ஆரா சினிமாஸ்

படங்களை டிஸ்ட்ரிபியூஷன் செய்வதில் பிரபல நிறுவனமான ஆரா சினிமாஸ் தயாரிக்கும் படம் இது. அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தற்பொழுதைய அரசியல் சூழலை வைத்து கிண்டலும் கேலியாக உறவாக்கப்பட்டுவருகிறதாம்.

‘ராஜதந்திரம்’ பட புகழ் வீரா ஹீரோவாக மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஹீரோயினாக்க நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதர்ஷன் ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனி எடிட்டிங், மாட்லி ப்ளூஸ் இசை.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது.

Ais
AIS
ais
விரைவில் சங்கத்தின் ஸ்ட்ரிக் முடிந்தவுடன் ஆடியோ ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர் படக்குழு.