பல முன்னணி தொலைத்தொடர்புகளை பின்னுக்குத் தள்ளிய ஜியோ நிறுவனம். தற்பொழுது ஜியோ நிறுவனத்திற்கு சவால் விடும் திட்டங்களை மற்ற நிறுவனங்கள் வெளியிட போவதாக செய்திகள் வந்துள்ளது. அதனை பற்றின விவரங்களை பார்க்கலாம்.
தொலைத்தொடர்பு துறைக்குள் ஜியோ நிறுவனம் எப்போது கால் தடம் பதித்ததோ அப்போதிலிருந்தே வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக பெரும் சரிவை சந்தித்தன.
ஜியோ நிறுவனத்தின் புதிய புதிய திட்டங்கள் மூலமாகவும் மக்களை கவர்ந்து வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டனர். அதனால் வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து அதிலும் சரிவை சந்தித்தன.
17 ஆண்டுகளாக இருக்கும் வோடபோன் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் தற்போது இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு வர்த்தகரீதியாக முன்னேறுவதற்கும் சில திட்டங்களை ஏற்படுத்தி உள்ளன. அதாவது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான டேட்டா சேவையின் மூலம் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.

அதனால் தற்போது மற்ற நிறுவனங்களுக்கு ஏற்ப குறைபாடுகளை சரி செய்து வருவதால் தனது வர்த்தகம் மீண்டும் ஏற்றத்தை சந்தித்துள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையான வருமான விவரம் வெளியிடப்படும் போது அது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களை டேட்டா சேவை கட்டணத்தை குறைத்ததுடன் சலுகைகளை அளிக்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் மூலம் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் கொண்டு வர முடியும் என திட்டம் போடுகின்றனர். இதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.