Airtel-Jio-Internet-Offer-CinemaPettai

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் டிராய் அறிவுறுத்தலின் படி ஜியோ திரும்பப் பெற்றது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் எனும் சலுகையை அறிவித்தது. தண் தணா தண் சலுகையின் கீழ் வழங்கப்பட்ட 84 நாள் வேலிடிட்டி ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது.

ஏப்ரல் மாதம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தண் தணா தண் சலுகைகள் ரூ.309-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அதன்படி ரூ.309 விலையில் தண் தணா தண் சலுகையில் 84-நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டது, இதன் வேலிடிட்டி 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399-ஆக மாற்றப்பட்டுள்ளது.

தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84-நாட்களில் இருந்து 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் வேலிடிட்டி மற்றும் டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.399 திட்டத்தில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் ரூ.999 விலையில் 112 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.Airtel-Jio-Internet-Offer-CinemaPettai

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தை மை ஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் வலைத்தளம் மூலம் வாடிக்கையாளர்கள் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 30 ஜிபி போனஸ் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரூ.999 பிரீபெயிட் திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. என்னும் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதன்பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு ஏர்டெல் எண்களுக்கு நிமிடத்திற்கு 10 பைசாவும், மற்ற நெட்வொர்க்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசாவும் வசூலிக்கப்படும்.

தற்போதைய சலுகையின்படி ஏர்டெல் ரூ.999 திட்டத்திற்கு ஏர்டெல் பேமென்ட் பேங்க் மூலம் பணம் செலுத்துவோருக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.999 திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் திட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவு டேட்டாவினை வழங்கினாலும், இதன் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இதேபோல் ரூ.509 ஜியோ திட்டத்தில் 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள ரூ444 திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 360 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி நெட்வொர்க் வழங்காது என்பதால் 3ஜி வேகத்திலேயே இண்டர்நெட் பயன்படுத்த முடியும்.