ஜியோவை சமாளிக்க புது குண்டு வீசும் ஏர்டெல்.. இதிலாவது வெடிக்குமா?

ஜியோ வந்த நாளில் இருந்து மற்ற நெட்வொர்க்குக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக பாதிக்கப்பட்டது ஏர்டெல் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில் தற்போது பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசம் இருப்பதற்கு என்ன வழி உண்டோ அதை செய்து வருகின்றன.

ஆனால் ஜியோவின் இலவச சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக ஏர்டெல் தற்போது 3ஜி சேவையை நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளது.

இனி வாடிக்கையாளர்கள் அனைவரும் பொது சேவை மட்டுமே உபயோகப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால் 3ஜி உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களை 4ஜி மாற்றும்படி கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு முழுமையாக 3ஜி பயன்பாடு இருக்காது, வருமானம் அதிகரிக்கும். சேவையின் மூலம் புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment