Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமா கிளைமாக்ஸ்களில் ஏர்போர்ட் சென்டிமென்ட்.. ஹிட்டடித்த படங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் காட்சிகள் எப்போதுமே வெற்றி பெறும். ஆனால் சில டைரக்டர்கள் படம் இயக்குவதற்கு என்று நிறைய சென்டிமென்ட் வைத்துள்ளனர். அதில் ஒரு செண்டிமெண்ட் தான் கிளைமாக்ஸை ஏர்போட்டில் எடுப்பது.
அப்படி எடுத்த படங்களும் அவர்கள் நினைத்தபடி பெரிய ஹிட்டாகியுள்ளது. அதில் முதன்முதலில் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற திரைப்படம் மின்னலே. மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜின் அசத்தலான இசையில் வெளிவந்த படம். பல இளைஞர்களுக்கு இன்று வரை இந்த படம் ஃபேவரிட் ஆக உள்ளது.
அடுத்ததாக தளபதி விஜய் மற்றும் ஜெனிலியா நடித்த சச்சின் திரைப்படம். இந்த படம் இன்று கூட தொலைகாட்சிகளில் வரும் போது பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த அளவு நகைச்சுவை கலந்த காதல் கதையை அழகாக வெளிப்படுத்திய திரைப்படம். இதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் வெளியூர் செல்வதை போலவும் ஜெனிலியா தன் காதலை சொல்வது போலவும் காட்சிகளை எடுத்து இருப்பார்கள்.
மீண்டும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விமான நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு இருக்கும். அதில் அவர் பேசும் தனலட்சுமி உட்காரு என்ற வசனம் முதல், போட்டியின் நடுவில் கடந்து செல்லும் விமானம் என அதனைச் சுற்றி அமைந்திருக்கும். இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரேட் மார்க்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியையும் இந்த ஏர்போர்ட் சென்டிமென்ட் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த 96 திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் தனது முதல் காதலியை பிரிய மனம் இல்லாமல் கண்ணீரோடு வழி அனுப்பும் காட்சிகள் இளைஞர்களை கண்கலங்க வைத்தது. இந்த படமும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்திலும் கிளைமாக்ஸ் காட்சி விமான நிலையத்தில் தான். காதலை சொல்லவும் முடியாமல், காதலியை அணைக்கவும் முடியாமல் சிக்கி தவிக்கும் ஆர்யாவின் நிலைமை பல இளைஞர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்த படமும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் நிறைய படங்கள் இதே மாதிரி ஏர்போர்ட் சென்டிமென்ட் உடன் வந்து தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
