ஏர்செல் நிறுவனம் தனது சேவையை முடக்கியுள்ளது, அதனால் வாடிக்கையாளர்கள் கிளை நிறுவனம் முன்பு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைதொடர்பான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதற்காக சில பணிகளில் இறங்கியுள்ளது, ஏர்செல் நிறுவனத்தை சின்னக்கண்ணன் சிவசங்கர் என்பவர் 1999 ம் ஆண்டு தொடங்கினார். அதன் பின்னர் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் பங்குகளை வாங்கியது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட சேவை படிப்படியாக நாடு முழுவதும் நிறுவப்பட்டது இந்த நிறுவனம் சுமார் 8.5 கோடி வாடிக்கையாளரை கொண்டு இயங்கி வந்தது.

aircel

கடந்த 2016 ம ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ தனது சேவையை தொடங்கியது அதில் அதிரடி சலுகைகளும், இலவசங்களும் அறிவித்துவன்தது இதனால் ஏராளனமான வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறினார்கள் அதனால் ஏர்டெல்,வோடாபோன், ஐடியா என அணைத்தது நிறுவனமும் பாதிக்கப்பட்டது அதில் ஏர்செல் நிறுவனமும் உண்டு. இதில் ஏர்செல் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது 120 கோடி இருந்த லாபம் 5 கோடியாக சரிந்தது அதனால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 120 கோடி நஷ்டத்தை அடைந்தது.

அதனால் ஏர்செல் நிறுவனம் எந்த முன் அறிவிப்பும் இன்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிருத்திவருகிறது இந்த பிரச்சனை கடந்த 4, 5 நாட்களாக இருந்து வருவதாகவும், இது குறித்து உரிய பதிலை அளிக்க அதிகாரிகள் மறுப்பதாகவும், வாடிக்கையாளர்கள் கூறுகின்றன. இந்த நிலையில் கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.