துபாய்: ‘அணியில் மீண்டும் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக,’ இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இந்திய அணி பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சிஐ.,) அறிவித்தது. இதில் மிக நீண்ட இடைவேளைக்கு பின் யுவராஜ் சிங் இடம்பிடித்தார்.

தோனி கேப்டனாக இருந்தவரை எவ்வளவு முயற்சித்தும் இவரால் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனால், தற்போது தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி கோலி தலைமையில் விளையாடுகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங்கிறகு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நிச்சயம் வீணாக்க மாட்டேன் என் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,’ இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது, அளவில்லாத ஆனந்தத்தை தருகிறது. அதனால் என்னால் முடிந்த 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்தி, திறமையை நிரூபிப்பேன். இங்கிலாந்தில் நிறைய இந்தியர்கள் வாழ்கின்றனர். அதனால் அதுகிட்டத்தட்ட, சொந்தமண்ணில் விளையாடுவது போலத்தான் இருக்கும். இதுவும் எனக்கு நிச்சயமாக ஊக்கமளிக்கும்,’ என்றார்.