Connect with us
Cinemapettai

Cinemapettai

சீனாவில் பிரதமர் மோடியை வீழ்த்திய அமீர்கான்- எப்படி தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீனாவில் பிரதமர் மோடியை வீழ்த்திய அமீர்கான்- எப்படி தெரியுமா?

இந்திய சினிமாவில் தயாரான இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. பாகுபலி 2 இந்தியாவிலும், சீனாவில் அமீர்கானின் தங்கல் படமும் வசூலை குவித்து வருகிறது.

சீனாவில் Weibo என்ற பிரபல சமூக வலைதளம் இருக்கிறது. அந்த வலைதளத்தில் தங்கல் படம் அங்கு வெளியாவதை தொடர்ந்து புதிதாக ஒரு அக்கவுண்ட்டை திறந்திருக்கிறார் அமீர்கான். தற்போது வரை அவரின் அந்த சமூக வலைதளத்தில் இதுவரை 5.86 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்திருக்கின்றனர்.

2015ம் ஆண்டில் சீனாவிற்கு செல்வதற்கு முன் பிரதமர் மோடியும் அங்கு ஒரு அக்கவுண்ட் திறந்திருக்கிறார். இதுவரை அவரை 1 லட்சம் பேர் தான் பின்தொடர்கிறார்களாம். மிகவும் பிரபலமான இந்தியர் என அங்கு பெயர் வாங்கியிருந்த மோடியை வீழ்த்தியிருக்கிறார் அமீர்கான். அதோடு அவ்வப்போது சீனா சம்பந்தப்பட்ட பல விஷயங்களை மோடி பகிர்ந்தும் வருகிறார்.

அமீர்கானுக்கு Amier Han என்று சீன மொழியில் சமூக வலைதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top