11 வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் அஜித்.. வெப் சீரியலில் சுட்ட கதையா AK61.?

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குகிறார். இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் அஜித் 61 படத்திற்காக படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. அஜித் 61 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 11 வருடங்களுக்கு பிறகு அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தோன்றுவதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அஜித் 61 படம் சர்வதேச தொடரான மணி ஹெய்ஸ்ட் என்ற வெப்தொடரை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இத்தொடர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் அஜித் தான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரின் தழுவல் தான் அஜித் 61 எனக் கூறப்படுகிற நிலையில் பணம் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவனாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். அத்துடன் அஜித் 61 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அதிதி ராவ், பிரகாஷ்ராஜ் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மணி ஹெய்ஸ்ட் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதே கதை மையமாகக்கொண்டு வினோத் அஜித் 61வது படத்தை எடுக்கப்படுவதால் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

- Advertisement -