Connect with us
boomerang-movie

‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை..! ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..

Politics | அரசியல்

‘தூக்குத் துரை’ இடத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை..! ரூ. 1264 கோடி மத்திய அரசு ஒப்புதல்..

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தென் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகு பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் அதனால் மத்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு உறுதி செய்துள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ளது இதன் மதிப்பு ரூ.1264 கோடி . இது குறித்து பொன்  ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர் என கூறியுள்ளார் . அவருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமைக்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top