டெல்லி: அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் நிலையில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுத்தர எடப்பாடி கோஷ்டி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைய முடிவெடுத்தது முதல் ஆரூடங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. எடப்பாடி முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என கூறியதாகவும் ஓபிஎஸ் தமக்கு முதல்வர் பதவிதான் வேண்டும் என அடம்பிடிப்பதாகவும் கூறப்பட்டது.
பேச்சுவார்த்தை குழுக்கள் பின்னர் ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலராகவும் எடப்பாடியே முதல்வராகவும் நீடிப்பார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்காக குழுக்களை அமைத்துள்ளன.

அதிகம் படித்தவை:  ரூ9,000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா அதிரடி கைது!

விலகும் எடப்பாடி?

விலகும் எடப்பாடி?

இரு கோஷ்டிகளும் குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் டெல்லி பாஜக மேலிடம் என்ன உத்தரவிடுகிறதே அதைத்தான் நிறைவேற்றப் போகின்றன. தற்போதைய நிலையில் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக உள்ளாராம்.

முதல்வராகும் ஓபிஎஸ்

முதல்வராகும் ஓபிஎஸ்

புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளாராம். அதேநேரத்தில் சசிகலா வசம் உள்ள பொதுச்செயலர் பதவி எடப்பாடி பழனிச்சாமிக்கு போகிறதாம். இப்படி செய்வதன் மூலம் சசிகலா, தினகரன் அல்லாத அதிமுக என்கிற பாஜகவின் கனவு நிறைவேறுகிறது.

அதிகம் படித்தவை:  ஹீரோயினை விட எனக்கு மேக் அப் போட அதிக நேரம் ஆகியிருக்கும் - 2.0 பற்றி அக்ஷய் குமார்.

விஜயபாஸ்கர் நீக்கம்?

விஜயபாஸ்கர் நீக்கம்?

மேலும் அமைச்சரவையில் இருந்து சர்ச்சைக்குரிய விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு மாஃ.பா பாண்டியராஜன் அல்லது செந்தில் பாலாஜி ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்பட உள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் திங்களன்று வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.