Tamil Nadu | தமிழ் நாடு
தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கிய அதிமுக! புதிய குழுக்களுடன் விஸ்வரூபம்!
தமிழகத்தில் அஇஅதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார். மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தீவிரமாக தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக புதியதாக பல குழுக்கள் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களுக்கான பணியும் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அஇஅதிமுக சார்பில் உருவாக்கப்பட்டுள்ள குழுக்களின் விபரம் இதோ:
- 11 பேர் கொண்ட அறிக்கை தயாரிப்பு குழு
- 3 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழு
- 7 பேர் கொண்ட ஊடக சந்திப்பு குழு
- 9 பேர் கொண்ட எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டிய குழு
இவைகளைத் தவிர 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அதிமுக 11 பேர் கொண்ட குழு உட்பட 5 தேர்தல் குழுக்களை உருவாக்கி உள்ளது.
மேலும் அஇஅதிமுக கட்சி தன் கட்சியின் மூத்த உறுப்பினர்களையும், ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் சேர்த்து 11 பேர் கொண்ட குழுவை வலுவாக கட்டமைத்துள்ளது.
அதேபோல் எதிர்க்கட்சியின் புகார்களை துவம்சம் செய்யவும், ஊடகம் ஒருங்கிணைப்பை சரியான விதத்தில் சீராகச் செய்யவும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் பணிகளுக்காக மொத்த தொகுதிகளையும் 30 மண்டலங்களாக பிரித்து அதற்கான பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்களையும், அமைச்சர்களையும் அதிமுக தலைமை நியமித்துள்ளது.
எனவே, இவ்வாறு இந்த குழுக்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு அஇஅதிமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

eps-ops-admk
