AH-Kaashifஇசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை மலையாளத்தில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்தவர். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவும் இசை அமைப்பாளர். ரெஹானா மகன் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இசை அமைப்பாளர். ரகுமானின் மகன் அமீன் இப்போது பாடகராக உருவாகி வருகிறார். தற்போது ரகுமான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசை அமைப்பாளர் வந்திருக்கிறார். பெயர் ஏ.எச்.காசிப். இவர் ரகுமானின் இன்னொரு சகோதரியின் மகன்.

காசிம் இன்னும் சினிமாவுக்கு இசை அமைக்கவில்லை. அதற்கு தயாராகும் வகையில் சென்னையில் நடைபெற இருக்கும் ரோஹித் ரமேஷின் கால்பந்து போட்டிக்கு சென்னை சிட்டி கால்பந்து அணிக்காக ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார். கால்பந்துக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொடர்பை இந்தப் பாடல் விவரிக்கிறது. இதன் வீடியோவில் காசிப்பும், அணியின் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.

கோல்போடு என்ற இந்த இசை ஆல்பம் லண்டன் பிபிசி நடத்தும் அஷாந்தின் ஓம்காராவின் ஷோவில் இந்த வாரத்துக்கான பாடலாக தேர்வாகி உள்ளது.