ஏ.ஜி.எஸ் குழுமம் சினிமா தயாரிப்பது, விநியோகம் செய்வது என்று மட்டும் அல்லாமல் திரையரங்கம் நடத்தவும் செய்கின்றனர். சினிமா துறை மட்டும் அல்லாது  மிக பெரிய கார்ப்பரேட் நெட்ஒர்க் இவர்கள்.

ags entertainment

ஜி எஸ் டி அமலுக்கு வந்த பின் சமீபத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணம் கிடு கிடுவென  உயர்ந்து விட்டது.  இதனால் தியேட்டரில்  படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக  குறைந்து விட்டது  என்பது தான் நிதர்சனமான உண்மை. பெரிய ஸ்டாரின் படங்கள் அல்லது படம் சிறப்பாக உள்ளது என ரெவியூ சொல்லப்படும் படங்கள்  தான் ஹவுஸ் புல் ஆகிறது.

Archana Kalpathi – AGS Entertainment

இந்த நிலைமையை சமாளிக்க சென்னையிலுள்ள ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் நிறுவனம் புதிய  முடிவை  எடுத்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கு ஒரு ஆச்சிரியம் என்று இந்த போட்டோவை  தங்கள் ட்விட்டரில் பதிவேற்றினார்.

ags cinemas

பலரும் இது உங்களின் மாற்றி அமைக்கப்பட்ட திரை கட்டண அமைப்பு என்று பதில் அளித்தனர். பலரும் இந்த செயலை பாராட்டினார். பலர்  லைக் மற்றும் ரீ- ட்வீட் செய்தனர்.

இந்நிலையில் இது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கிளாஸ் டிக்கெட் விலை இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.

AGS Ticket Pricing

இது மொழி வாரியாக பிரிக்கப்பட்டுள்ள கட்டணம் என்பது தான் அந்த செய்தி. நேரடி தமிழ் படங்களுக்கான டிக்கெட் கட்டணம் 115 ரூபாய் என்றும், வேறு மொழி படங்களுக்கு 135 ரூபாய் என்றும், வெளிநாட்டு படங்களுக்கு 140 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் .

இந்த புதிய கட்டணம் முறை என்று அமலுக்கு வரப்போகிறது என்ற தகவல் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

ஏற்கனவே பார்க்கிங் கட்டணம் மாத்தி அமைக்கப்பட்ட நிலையில்,

இந்த இந்த புதிய கட்டண குறைப்பு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல், தமிழ் அனைத்து சினிமா துறையினருக்கும் மகிழ்ச்சியை தரும் செய்தியாக அமைந்துள்ளது. குறைந்த விலையில் தமிழ் படங்களை திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்களுக்கும் கூட்டம் வரும் என்ற நிலை மகிழ்ச்சி அளிக்கிறது.

விரைவில் இந்த முடிவை பிற திரை அரங்கங்களும் பின் பற்றினால் நல்லது தான்.

சினிமா பேட்டையின் வாழ்த்துக்கள் டூ டீம் ஏ.ஜி.எஸ் !!