அதிமுகவின் கோட்டையாக மாறும் வேளாண் பகுதிகள்.. முதல்வருக்கு கைகூப்பி நன்றி கூறிய விவசாயிகள்!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்திலும், தங்கள் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதிலும் மும்மரமாக இருக்கின்றனர்.

அந்தவகையில் கடந்த ஞாயிறு அன்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது கட்சியான அதிமுகவின் சார்பாக அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் பிரச்சார அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், இலங்கை தமிழர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து ஏழை, எளிய மக்களும் பயனடையும் வகையில் பல வாக்குறுதிகளை அடுக்கடுக்காக அளித்துள்ளார் முதல்வர்.

அது மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு தமிழக முதல்வர் பிரச்சார களத்தில் இறங்கி மும்மரமாக பிரச்சாரம் செய்து வருகிறாராம். மேலும் முதல்வருக்கு செல்லுமிடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிகிறது.

ஏனென்றால் சென்றமுறை கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது பொதுமக்கள் அனைவரும் வெள்ளம் போல திரண்டிருந்தனர். ஆனால் இந்த முறை திமுகவின் கோட்டை என்று கூறப்படும் காவிரி டெல்டா பகுதிகளிலும் முதலமைச்சருக்கு ஏகபோகமாக வரவேற்பு  கிடைத்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் முதல்வர் ஒரு விவசாயி என்பது தான் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் விவசாயிகள் அதிக அளவில் இருக்கும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வரின் பிரச்சாரத்தை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனராம். இது விவசாயிகளுக்காக முதல்வர் அளித்த பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி ஆகியவற்றின் வெளிப்பாடு தான் என்று சிலர் கூறுகின்றனர்.

edappadi-admk

மேலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளின் ஆதரவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் முதல்வர் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து பேசி வருவதோடு, முதல்வர் ஒரு விவசாயி என்பதால் தான் விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து  அவற்றை சரிசெய்வதற்கான  நலத் திட்டங்களை வகுக்க முடிகிறது என்று முதலமைச்சரை தங்களில் ஒருவராக கருதும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி டெல்டா பகுதியில் கொங்கு மண்டலமும் அதிமுகவின் கார்கோடகன் இந்த முறை மாறியுள்ளது.

எனவே பல திட்டங்களை வகுத்து விவசாயிகளின் நலன் காக்க போராடும் முதல்வருக்கு போகும் இடமெல்லாம் சிறப்பு கிடைப்பதோடு, அங்குள்ள விவசாயிகள் கைகூப்பி தங்களுடைய நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்