சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

4 பேர் கூட போயி சம்பாதிச்சுக்குவேன்.. என்ன கருமம் டா, தலையில் அடித்துகொள்ளும் நெட்டிசன்கள்

யுடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமான சாமியார் அகோரி கலையரசனுக்கும் அவருடைய மனைவி பிரக லட்சுமி, இருவரும் டுபாக்கூர் என்று ஊருக்கே தெரியும், ஆனாலும் இவர்கள் பஞ்சாயத்தை நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தியாக முன்னணி மீடியாக்கள் கவர் செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்கள். தன் மனைவி தன்னோடு வாழ வராததால், கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டாராம் கலையரசன். அதன்பின் பாசமாகப் பேசி அழைத்து தன் மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்தினார்கள் எனவும் இவர் தெரிவித்திருந்தார்.

என்ன கருமம் டா இதெல்லாம்

இதை தொடர்ந்து போலீசில் புகைரளித்துள்ளார் கலையரசன். அதில், மனைவி தன்னோடு வாழ வராததால் கோவப்பட்டு அம்மா வீட்டுக்கு போனதாகவும், பாசமாக அழைத்ததால் மீண்டும் வந்ததாகவும் கூறியிருந்தார். மேலும், “திண்டிவனத்தில் ஒரு இடம் விஷயமாகப் போயிருந்தோம். அதை முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும் கதவை மூடிக்கிட்டு, செல்போன் எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு, சாகுடா சாகுடான்னு சொல்லி அடிச்சு சித்திரவதை பண்ணுனாங்க.”

“அடுத்தநாள் அவங்ககிட்ட பேசி கோயிலில் பூஜைக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்புனேன். அவங்க அப்பாவையும் என்கூட அனுப்பி வைச்சாங்க. அப்போ கிடைத்த கேப்பில் அம்மாக்கு கால் பண்ணி அழுதேன். வழக்கறிஞர்-க்கு கால் பண்ணி விவாகரத்து பண்ண தேவையான டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ண சொன்னேன்.”

“எங்களுக்கு சென்னை வரவே பயமாக இருக்கு. அந்தளவுக்கு மிரட்டல் விட்டுட்டே இருக்காங்க. ஒரு நிமிஷத்தில் வெட்டிப்போட்டுடுவோம்ன்னு சொல்லி என் மனைவியும் மச்சானும் மிரட்டுறாங்க. நீ மட்டும் தான் சம்பாதிச்சுக் கொடுக்கணுமா, நான் நான்கு பேர்கூடபோய் கூட சம்பாதிச்சுக்குவேன். வீட்டுக்கு வா உன்னை மருந்தை வைச்சு கொல்றேன்னு மிரட்டுறாங்க. எனக்கு பாதுகாப்பு வேணும்.” என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து, நெட்டிசன்கள், “ஊர்ல அவன் அவனுக்கு 1008 பிரச்சனை, இதுல இவன் வேற.. என்ன கருமம் டா இதெல்லம்..” என்று கமெண்ட் செய்து வருகிறனனர்.

- Advertisement -

Trending News