fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சந்தானம் பிறந்தநாளுக்கு வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் டீசர்.. வீடியோ போட்டு கொன்னுட்டாரே

Agent-Kannayiram-Official-Teaser

Videos | வீடியோக்கள்

சந்தானம் பிறந்தநாளுக்கு வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் டீசர்.. வீடியோ போட்டு கொன்னுட்டாரே

டிடெக்டிவ் ஏஜென்டாக சந்தானம் நடித்துள்ள டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் புகழ் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் டீசர் சந்தானத்தின் பிறந்த நாள் என்பதால் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த டீசரை வெளியிட்டு உள்ளனர். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த டீஸரில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை மியூசிக் படு மொக்கையாக இருப்பதாகவும், அரைத்த மாவை, திரும்ப, திரும்ப அரைத்தது என்பது போன்ற பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா பெயரை வைத்து வேற யாரோ இசையமைத்து உள்ளதாகவும் அல்லது யுவன் சங்கர் ராஜா பீல்ட் அவுட் ஆகி விட்டாரா.? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. பல திறமையான நடிகர்கள் வாய்ப்புக்காக சுற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இதுபோன்ற கதாபாத்திரங்கள் சினிமாவை சற்று சோர்வடைய செய்கிறது.

இதுபோன்ற டீசர் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை தற்போது கணித்து விடாதீர்கள் என்று சந்தானத்தின் ரசிகர்கள் சற்று ஆதரவு கூறி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top